LIVE: தமிழக வெற்றிக் கழகம் 'தளபதி விஜய் கல்வி விருது' விழா நேரலை - Vijay education award event - VIJAY EDUCATION AWARD EVENT
Published : Jul 3, 2024, 9:58 AM IST
|Updated : Jul 3, 2024, 11:32 AM IST
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழாவின் முதற்கட்ட நிகழ்வு கடந்த ஜூன் 28ஆம் தேதி சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. அதில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் சட்டமன்ற தொகுதி வாரியாக 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரில் அழைத்து பரிசுத்தொகை அளித்து கௌரவித்தார்.இந்நிலையில் கல்வி விருது வழங்கும் விழாவின் இரண்டாம் கட்ட நிகழ்வு இன்று நடைபெறுகிறது. இதில் செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்ட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களை சேர்ந்த தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த 740க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது பெற்றோருடன் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்காக காலை உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. மதிய உணவு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.
Last Updated : Jul 3, 2024, 11:32 AM IST