தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 2025: ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசிக்கும் சபாநாயகர்! - TAMIL NADU ASSEMBLY 2025

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2025, 10:00 AM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2025-ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேசிய கீதம் பாடாததால் உரை நிகழ்த்தாமல் ஆளுநர் வெளியேறினார். இப்போது ஆளுநர் உரைக்கான தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்து வருகிறார். ஆளுநர் உரைக்கான கூட்டத்திற்கு பின்னர் அலுவல் ஆய்வுக்குழுவின் கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவு செய்து சபாநாயகர் அறிவிக்க உள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சியில் தேர்வுச் செய்யப்பட்ட தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், தனி அலுவலர்களை நியமனம் செய்வதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை எழுப்புவதற்கு எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால், ஆளுநர் உரை மீதான கூட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மரபுப்படி ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை இடம் பெறுவது வழக்கமாகும். ஆளுநரின் உரையில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள், கொள்கைகள், அரசின் சாதனைகள், அந்த ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் ஆகியவை இடம் பெறும். ஆளுநரின் உரை சட்டப்பேரவையால் தயார் செய்யப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை தமிழ்நாடு ஆளுநர் சட்டப் பேரவையில் படித்து, பேரவையின் முதல் கூட்டத்தை தொடங்கி வைப்பார்.

ABOUT THE AUTHOR

...view details