தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

கோவை அருகே தனியார் பள்ளி வாகனம் விபத்து.. வெளியான் சிசிடிவி காட்சிகள்! - School bus accident - SCHOOL BUS ACCIDENT

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 26, 2024, 3:36 PM IST

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், சூலூர் அடுத்த நீலாம்பூரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் அப்பள்ளி வாகனம் பட்டணம் பகுதியிலிருந்து சஞ்சய், திவ்யா, தனிஷ்கா, பிரணவ் ஆகிய 4 மாணவர்களை ஏற்றிக் கொண்டு, நாகம்மநாயக்கன்பாளையம் வழியாக ஜே.ஜே நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளது. 

அப்போது ஜே.ஜே நகர் செல்லும் வழியில், 30 அடி அகல மண் சாலையில் சென்று கொண்டிருந்த நிலையில், எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு வழி விடுவதற்காக, ஓட்டுநர் சாலையின் வலது புறமாக வாகனத்தை நிறுத்த முயன்றுள்ளார். ஆனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வாகனம், 7 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அதனைக் கண்ட அப்பகுதியினர் பேருந்தில் இருந்த அனைவரையும் மீட்டனர்.  

அதில், சஞ்சய் என்ற மாணவருக்கு இடது பக்க கண்ணுக்கு கீழ் காயமும், மாணவி ஒருவருக்கு வலது கையில் லேசான காயமும் ஏற்பட்ட நிலையில், இருவரையும் சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனைத் தொடர்ந்து, விபத்து குறித்து தகவலறிந்த சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில், பள்ளி பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம், அருகே கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகிய காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ABOUT THE AUTHOR

...view details