தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

தருமபுரியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த சௌமியா அன்புமணியின் மகள்! - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 7, 2024, 11:10 AM IST

தருமபுரி: தமிழகம் முழுவதும் ஏப்ரல் 19ஆம் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. அதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். இதனையடுத்து தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதி மற்றும் மேட்டூர் சட்டமன்றத் தொகுதிகளில் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், சௌமியா அன்புமணியின் மூன்று மகள்களும் அவருக்காக தருமபுரி மாவட்டம் முழுவதும் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சௌமியா அன்புமணி 3வது மகளான  சஞ்சுத்ரா, தருமபுரி நகர்ப் பகுதியில், சௌமியா அன்புமணிக்கு 'மாம்பழம்' சின்னத்தில் வாக்களிக்குமாறு நேற்று (சனிக்கிழமை) வீடு வீடாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

அவருடன் பாமக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக்கட்சி பிரமுகர்கள், பாமக தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details