முட்டை, டம்ளர்களின் மீது அமர்ந்து யோகாசனம் செய்த பள்ளி மாணவர்கள்! - Trichy school students world record - TRICHY SCHOOL STUDENTS WORLD RECORD
Published : May 27, 2024, 1:24 PM IST
திருச்சி: திருச்சியில் உள்ள டைனி கிட்ஸ் பள்ளி சார்பாக உலக சாதனை நிகழ்ச்சி, தமிழ்ச் சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் ஐந்து வயதிற்குட்பட்ட சிராதர்சன், வேதாரக்ஷனா, லாவண்யா, சமுத்ரா, ஸ்ரேயாஸ்ரீ மற்றும் சரண்யா ஸ்ரீ ஆகியோர் 32 முட்டைகள் கொண்ட தட்டில் 5 நிமிடம் வரை பத்மாசனம் நிலையில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.
இதே போல் ஐந்து வயதிற்கு மேற்பட்ட ஜஸ்வின், அப்ரஜித் மற்றும் ஹன்சிகா ஆகியோர் 5 நிமிடம் வரை மூன்று டம்ளர்களில் பத்மாசனம், அக்கர்னா, மற்றும் தனுராசனம் நிலையில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு வெர்கஷா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் எடிட்டர் மற்றும் முதன்மை தீர்ப்பாளர் ரெங்கநாயகி உலக சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
அதனைத் தொடர்ந்து டைமிங் கிட்ஸ் பள்ளி சார்பாக பள்ளி மாணவ, மாணவிகளின் நடனம், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவித்தனர்.