புனித அருளானந்தர் தேர் திருவிழா: மத வேறுபாடின்றின்றி உப்பு காணிக்கை செலுத்தி வழிபாடு..!
Published : Feb 5, 2024, 7:45 AM IST
ஈரோடு: மத வேறுபாடின்றின்றி புனித அருளானந்தர் தேர் திருவிழாவில் உப்பு காணிக்கை செலுத்தி அனைதது சமுதாய பெண்கள் வரவேற்றனர்.
சத்தியமங்கலம் புனித அருளானந்தர் ஆலய தேர் திருவிழா கடந்த கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத்தொடர்ந்து ஆலயத்தில் தினந்தோறும் ஜெயமாலை, நற்கருணை ஆராதனைகள், கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. நிகழ்ச்சியின் நிறைவு நாளாக நேற்று (பிப்.4) சிறுவர் சிறுமியருக்கு உறுதி பூசுதல், முதல் திருவிருந்து நடைபெற்றது. அன்றிரவு மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட புனித அருளானந்தர் தேர் ஊர்வலமாக புறப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.
திப்பு சுல்தான் சாலையில் ஊர்வலமாக வந்த புனித அருளானந்தர் தேருக்கு உப்பு காணிக்கையாக செலுத்தி வரவேற்ற்றனர். இந்து, முஸ்லீம் வேறுபாறின்றி பெண்கள் உப்பு காணிக்கை செலுத்தியது சமூக நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாக உள்ளது. இந்த ஊர்வலமானது சத்தியமங்கலம் கடைவீதி, பெரியபள்ளி வாசல் வீதி, திப்பு சுல்தான சாலை வழியாக ஆலயத்தை சென்றடைந்தது. பின்னர் நடைபெற்ற கண்கவர் வாணவேடிக்கை பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.