தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ஊடக வித்தகர் ராமோஜி ராவ் நினைவேந்தல் நேரலை! ஆந்திர அரசு தரப்பில் ஏற்பாடு! - Ramoji Rao commemoration - RAMOJI RAO COMMEMORATION

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 4:06 PM IST

Updated : Jun 27, 2024, 4:13 PM IST

அமராவதி: மறைந்த ராமோஜி குழும தலைவர் ராமோஜி ராவின் நினைவேந்தல் ஆந்திர பிரதேச அரசு சார்பில் நடைபெறுகிறது. ஆந்திர பிரதேசம் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இந்த நினைவேந்தல் கூட்டத்தில்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். விஜயவாடாவில் உள்ள அனுமோலு கார்டன்ஸ் பகுதியில் இந்த நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. ஊடகம், சினிமா, சிட்பெண்ட், உணவுப் பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ராமோஜி ராவ் ஆற்றிய பங்கினை பறைசாற்றும் வகையில் ஆந்திர அரசு தரப்பில் இந்த நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், அரசுத் துறை அதிகாரிகள், எடிட்டர்ஸ் கில்ட் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள், பல்வேறு துறை சார்ந்த கலைஞர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார். இந்த நினைவேந்தல் கூட்டத்தில் ராமோஜி ராவின் குடும்ப உறுப்பினர்கள் உள்பட 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். ஊடக வித்தகர் ராமோஜி ராவ் கடந்த ஜூன் 8ஆம் தேதி இயற்கை எய்தினார். அவருக்கு வயது 87. உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். அரசு தரப்பில் அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.          
Last Updated : Jun 27, 2024, 4:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details