“நீங்க அசைவம் சாப்பிடுவீர்களா..?”.. அதிர்ந்த ராகவா லாரன்ஸ் அளித்த பதில் என்ன? - Raghava Lawrence - RAGHAVA LAWRENCE
Published : May 11, 2024, 5:21 PM IST
தருமபுரி: பாலக்கோடு மூங்கப்பட்டி பகுதியில் விவசாயிக்கு இலவச டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி, நடிகர் லாகவா லாரன்ஸின் மாற்றம் அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டு, மூக்கம்பட்டி கிராமத்தைச் சார்ந்த விவசாயி பிரபாகரனுக்கு டிராக்டர் சாவியை வழங்கினார்.
இதனையடுத்து, நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த டிராக்டரை வைத்துக் கொண்டு அவரும் சம்பாதிக்கலாம் மற்றும் ஊர் பொதுமக்களுக்கும் உதவ முடியும் எனவும், மாற்றம் என்பது சொல் இல்லை செயல் எனவும் தெரிவித்தார். மேலும், இந்த ஊரைச் சேர்ந்த பிரபாகரன் கையில் இந்த டிராக்டர் சாவியை ஒப்படைப்பதாகவும், எத்தனை விவசாயிக்கு இலவசமாக சேவை செய்கிறீர்களோ, அந்த அளவு உங்களை நான் சென்னைக்கு அழைத்து பாராட்டி பரிசு வழங்குவேன் என பேசினார்.
இதையடுத்து கிராம மக்களுடன் அமர்ந்து மதிய உணவை பொதுமக்களுக்கு பரிமாறி, அவரும் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். அப்போது அருகில் இருந்த பெண் நீங்க அசைவம் சாப்பிட மாட்டிடீர்களா என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த நடிகா் லாரன்ஸ், நான் வியாழன் சனிக்கிழமைகளில் அசைவம் சாப்பிட மாட்டேன் என தெரிவித்தார்.