ஆரணி பூசிமலைக்குப்பம் சீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்! பக்தர்கள் சாமி தரிசனம்! - பூசிமலைக்குப்பம் சீனிவாச பெருமாள்
Published : Jan 21, 2024, 5:32 PM IST
திருவண்ணாமலை: ஆரணி அடுத்த பூசிமலைக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ தேவி, பூதேவி, சமேத சீனிவாச பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று (ஜன. 21) நடைபெற்றது. முன்னதாக கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த யாக சாலையில் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், முதல் கால யாக பூஜை, லட்சுமி ஹோமம், புண்ணியாஸ்தானம், இரண்டாம் கால யாக பூஜை நடத்தி யாத்ராதானம், விசேஷ திரவிய ஹோமம், மகா பூர்ணாஹதி, தீபாரதனை நடத்தி, அருட் பிரசாதம் வழங்கி விமான கலச புறப்பாடு நடத்தி ஆலயத்தின் கோபுரத்தில் மேலே புனித நீரை தெளித்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து ஆலய கருவறையில் அமைக்கப்பட்டிருக்கும் விநாயகர், மற்றும் சீனிவாச பெருமாள் விக்கிரங்களுக்கு புனித நீரை தெளித்து அபிஷேகம் செய்து தீபாராதனை செய்து வழிபட்டனர். பக்தர்கள் அனைவரும் கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன் சீனிவாச பெருமாளை கரம் கூப்பி தரிசித்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை அடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.