போளூர் அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற வடமாநில கொள்ளையர்கள் மும்பையில் கைதான எப்படி..? - கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி
Published : Feb 21, 2024, 11:39 AM IST
திருவண்ணாமலை: போளூர் அடுத்து மொடையூர் கிராமத்தில் ஊள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வங்கியில் கடந்த 10ஆம் தேதி கேஸ் வெல்டிங் மூலம், வங்கியின் லாக்கரை உடைக்க முயற்சி செய்துள்ளனர். பின்னர், வங்கி லாக்கரை கொள்ளையடிக்க பயன்படுத்திய ஆயுதங்களை அருகே உள்ள வயலில் வீசிச் சென்றுள்ளனர்.
இதனிடையே வயலில் கிடந்த கொள்ளையர்கள் பயண்படுத்திய ஆயுதங்கள் குறித்து, வயலின் உரிமையாளர் கோவிந்தராஜ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின்படி கொள்ளையடிக்க முயன்ற நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், போளூரில் வங்கி லாக்கரை கொள்ளையடிக்க முயன்ற வடமாநிலத்தைச் சேர்ந்த மூன்று நபர்களை தனிப்படை போலீசார் மும்பையில் கைது செய்தனர். அதன் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்த்னர். மேலும், இந்த கொள்ளை சம்பவத்தில் அப்பகுதி கூர்காவே ஈடுபட்டதாக காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.