சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த கோயிலில் ஜப்பானியர்கள் சிறப்பு ஹோமங்கள் செய்து வழிபாடு! - சிற்றம்பலநாடீசுவர சுவாமி கோயில் - சிற்றம்பலநாடீசுவர சுவாமி கோயில்
Published : Apr 21, 2024, 5:12 PM IST
மயிலாடுதுறை: சித்தர்காடு பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காழி சிற்றம்பலநாடீசுவர சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் சீர்காழி சிற்றம்பல நாடிகளும், 64 சீடர்களும் சித்திரை மாத திருவோணம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆனார்கள். இதனால், இக்கோயிலில் சித்திரை மாத திருவோணத்தில் வெகு சிறப்பாக குரு பூஜை நடத்தப்படுகிறது.
இன்று இக்கோயிலுக்கு ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 50 பேர் வந்து, 64 சித்தர் ஜீவ சமாதியான சிவாலயத்தில் புனித நீர் அடங்கிய கடம் பிரதிஷ்டை செய்து, 136 மூலிகைப் பொருள்களைக் கொண்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, கோயில் உட்பிரகாரத்தைச் சுற்றி வந்து திருநீறு, விபூதி அணிந்து வணங்கி வழிபாடு மேற்கொண்டனர். ஜப்பான் நாட்டின் பல்வேறு மாகாணங்களில் இருந்து தமிழ்நாடு வந்துள்ள 50 பேர், கடந்த ஒருமாதமாக பல்வேறு கோயில்களில் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீமத் போகர் பழனி ஆதீனம் புலிப்பாணி ஆசிரமம் சார்பாக கௌதம் கார்த்திக் செய்திருந்தார்.