'ஏய் தள்ளு தள்ளு'.. வேலூர் அருகே நடுவழியில் பழுதாகி நின்ற அரசுப் பேருந்து! - government bus breakdown - GOVERNMENT BUS BREAKDOWN
Published : May 30, 2024, 7:13 PM IST
|Updated : May 30, 2024, 8:54 PM IST
வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்துள்ள சித்தூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆற்காட்டிற்குச் செல்லும் 10 AC என்ற அரசுப் பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்லும்போது சாலை நடுவே திடீரென பழுதாகி நின்று உள்ளது.
பின்னர், பேருந்தில் பிரேக் பிடிக்கவில்லை போல் தெரிகிறது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பின்னோக்கி சென்றுள்ளது. அப்பொழுது, பின்னால் நின்று கொண்டிருந்த வாகனங்கள் சத்தமாக ஒலி எழுப்பியுள்ளனர். இதனைப் பார்த்த நடத்துநர் உடனடியாக கீழே இறங்கி பேருந்தின் முன் டயரிலும், பின் டயரிலும் கற்களை வைத்து பேருந்தை நிறுத்தி உள்ளார்.
இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் பின்னர் பேருந்தில் இருந்த பயணிகள் இறக்கிவிடப்பட்டு, அங்கு இருந்த பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து காவல் துறையினர் உதவியுடன் சாலையில் பேருந்தானது ஓரமாக தள்ளி நிறுத்தி வைக்கப்பட்டது.
இதன் பின்னர் போக்குவரத்து சீரானது. பேருந்து திடீரென பழுதாகி நடுரோட்டில் நின்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், அரசுப் பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.