தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

43 நாட்களில் நிரம்பிய பழனி முருகன் கோயில் உண்டியல்.. ரூ.5.3 கோடி பக்தர்கள் காணிக்கை

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

திண்டுக்கல்: தமிழகத்தின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கடந்த சில தினங்களுக்கு முன்பு காலாண்டு விடுமுறை விடப்பட்டது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் வருகை புரிந்தனர்.

இந்நிலையில் இந்த கோயிலின் உண்டியல்கள் 43 நாட்களில் நிறைந்துள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன. 

மொத்த காணிக்கை வரவு: இதில், 5 கோடியே 3 இலட்சத்து பத்தாயிரத்து எழுநூற்று தொண்ணூறு ரூபாய் கிடைத்ததுள்ளது. வெளிநாட்டு கரன்சிகள் ரூ.1,123ம் கிடைத்துள்ளது. இதில் தங்கம் 1,346 கிராமும், வெள்ளி 31,595 கிராமும் கிடைத்தது. 

இவை தவிர பக்தர்கள் பித்தளை, தாமிரம் உள்ளிட்ட பல்வேறு உலோகங்களால் செய்யப்பட்ட வேல், கடிகாரம், ஏலக்காய், நவதானியங்கள், முந்திரிப்பருப்பு பட்டாடைகளையும் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் திருக்கோயில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், கல்லூரி மாணவிகள் என சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details