தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

"மோடி மீண்டும் பிரதமரானால் கச்சத்தீவு இந்தியாவின் வசம் வரும்" - வேலூர் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சூளுரை! - Ac Shanmugam - AC SHANMUGAM

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 2, 2024, 12:59 PM IST

வேலூர்: நாடளுமன்ற தேர்தல் ஏப்.19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை இந்தியா முழுவதும்  7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்தநிலையில் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

அந்தவகையில் நேற்றும் ஆம்பூரில் சட்டமன்றத்திற்கு உட்பட்ட புது கோவிந்தபுரம், பி. காஸ்பா சர்ச், சான்றோர்குப்பம், சோலூர் உள்ளிட்ட பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.இந்த தேர்தல் பிரச்சாரத்தில் போது கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த  ஏ.சி.சண்முகம் பேசுகையில், "கச்சத்தீவு பிரச்சனையில் தமிழக மீனவர்களுக்கு பாதிப்பு என்பதால் அப்பிரச்னையை பிரதமர் மோடி மிகவும் அக்கறையாகக் கையாண்டு வருகிறார். பலமுறை மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களுடைய படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. 

தமிழகத்தை சேர்ந்த ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போது தமிழகத்தில் திமுக ஆட்சி நடந்து கொண்டிருந்தது.கச்சத்தீவை மீட்கப் பிரதமர் மோடி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மோடி 3-ஆவது முறையாகப் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட பிறகு கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியாக மாறும்" இவ்வாறு கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details