LIVE: அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கும் மு.க.ஸ்டாலின்..நேரலை - MK Stalin - MK STALIN
Published : Jul 15, 2024, 8:54 AM IST
|Updated : Jul 15, 2024, 10:05 AM IST
திருவள்ளூர்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை துவக்கி வைக்கிறார். அதன் நேரலையைக் காணலாம்..தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கீழச்சேரி, அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை துவக்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து மப்பேடு முக்கு ரோடு சந்திப்பில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரத்திற்கு 2023-24 ஆண்டிற்கான 247 புறநகர பேருந்துகள் மற்றும் 64 நகரப் பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், பழைய பேருந்துகளுக்கு மாற்றாக இதுவரை 134 புறநகர பேருந்துகள் மற்றும் 12 நகர பேருந்துகள் புதிதாகக் கூண்டுக் கட்டி வழித்தடத்தில் இயக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது இந்த பகுதி மக்கள் பயனடையும் வகையில், 8 புறநகர பேருந்துகள் மற்றும் 2 நகர பேருந்துகள் 3.81 கோடி ரூபாய் செலவில் மொத்தம் 10 புதிய பேருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைக்க உள்ளார்.
Last Updated : Jul 15, 2024, 10:05 AM IST