Live: சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்! - MK Stalin campaign in Salem - MK STALIN CAMPAIGN IN SALEM
Published : Mar 30, 2024, 7:06 PM IST
|Updated : Mar 30, 2024, 7:53 PM IST
சேலம்: சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில், இன்று (மார்ச் 30) சேலம் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி மற்றும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தே.மலையரசன் ஆகியோரை ஆதரித்து, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதன் நேரலைக் காட்சிகள்.. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார். இதையொட்டி, சேலம், அக்ரஹாரம் மற்றும் கடை வீதிகளில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டவாறு, சேலம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு மு.க ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பின் போது குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் என ஏராளமானோர் முதலமைச்சருடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். முன்னதாக, நேற்று தருமபுரியில், தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணி மற்றும் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
Last Updated : Mar 30, 2024, 7:53 PM IST