LIVE: தேனியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை! - MK Stalin Theni Campaign - MK STALIN THENI CAMPAIGN
Published : Apr 10, 2024, 6:58 PM IST
|Updated : Apr 10, 2024, 7:52 PM IST
தேனி: நாட்டின் 18வது மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டின் அரசியல் கட்சியினர் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தேனியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் நேரலைக் காட்சிகள்.. முன்னதாக, இன்று காலை தேனி பெரியகுளம் சாலையில் உள்ள உழவர் சந்தை நுழைவாயிலில் இருந்து ஸ்டாலின் நடைபயணமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதனையடுத்து, அங்கிருந்த பழ வியாபாரி ஒருவர், முதலமைச்சர் ஸ்டாலினின் உருவத்தினை பழத்தில் வரைந்து, அதனை அவரிடம் கொடுத்தார். மேலும், அங்கு பெற்றோர் உடன் காய்கறி வாங்க வந்திருந்த சிறுவர், சிறுமியர்களிடம் அவர்களது படிப்பு குறித்தும் ஸ்டாலின் கேட்டறிந்தார். பின்னர், அங்கிருந்த தேநீர் கடையில் அவர் தேநீர் அருந்தினார். தொடர்ந்து, உழவர் சந்தைக்குச் சென்று அங்குள்ள வியாபாரிகளிடம் பேசினார்.
Last Updated : Apr 10, 2024, 7:52 PM IST