தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

கூட்டணி கட்சிகள் பங்கேற்ற காஞ்சிபுரம் திமுக பவள விழா பொதுக்கூட்டம்! - DMK Pavala Vizha General Meeting - DMK PAVALA VIZHA GENERAL MEETING

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2024, 6:33 PM IST

Updated : Sep 28, 2024, 9:09 PM IST

சென்னை: திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சியின் பவள விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி முப்பெரும் விழாவோடு சேர்த்து திமுக பவள விழாவும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், காஞ்சிபுரத்தில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் திமுக பவள விழா பொதுக்கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ வரவேற்புரையாற்றுகிறார். வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகிக்கிறார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமை வகிக்கிறார். விழாவில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். இதில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் திமுக கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சித் தலைவர்களான கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), தொல்.திருமாவளவன் (விசிக), வைகோ (மதிமுக), கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்), கே.எம்.காதர்மொய்தீன் (ஐயூஎம்எல்), கமல்ஹாசன்(மநீம), ஜவாஹிருல்லா (மமக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), தி.வேல்முருகன் (தவாக), ஸ்ரீதர் வாண்டையார்(மூமுக), தமிமுன் அன்சாரி(மஜக), கருணாஸ் (முபுக) உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திமுக மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் பங்கேற்கின்றனர்.
Last Updated : Sep 28, 2024, 9:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details