தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

சர்க்கரைபள்ளம் காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு.. பேருந்து ரத்தால் பொதுமக்கள் அவதி! - flood in sakkarai palam kaattaaru - FLOOD IN SAKKARAI PALAM KAATTAARU

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 16, 2024, 9:18 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் மாக்கம்பாளையம் வனக்கிராமம் அமைந்துள்ளது. இங்கு கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால், குரும்பூர் பள்ளம், சர்க்கரை பள்ளம் ஆகிய காட்டாறுகளில் வெள்ளநீர் அதிகமாக செல்கின்றது.

மேலும், இப்பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் கடந்த ஒராண்டுக்கு முன் தொடங்கி, தற்போது வரை நிறைவடையாமல் உள்ளது. இந்நிலையில், வெள்ளப்பெருக்கின் காரணமாக பள்ளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு, வாகனங்கள் செல்ல முடியாமல் குண்டும் குழியுமாக மாறியதால், அரசு போக்குவரத்து கழகம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகளின் பாதுகாப்பு கருதி, அரசு பேருந்து இயக்கத்தை முற்றிலும் ரத்து செய்துள்ளது.

மேலும், கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் செல்லும் அரசுப் பேருந்துகள் சர்க்கரைப்பள்ளம் வழியாக மட்டுமே செல்லும் என்பதால், தற்போது அப்பகுதி மக்கள் கடம்பூரிலிருந்து காட்டாறு வெள்ளத்தைக் கடந்து யானை நடமாடும் வழித்தடத்தில் சுமார் 10 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், உயர்மட்ட பாலத்துக்ககான கட்டுமானப்பணி நிறைவடையும் வரையில், சர்க்கரை பள்ளம் வழியாக காய்கறி லாரி மற்றும் பேருந்துகள் செல்லும் வகையில், கற்களால் ஆன உறுதித் தன்மையுடன் கூடிய மாற்றுப்பாதை ஏற்படுத்தி தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details