மதுரை பெரியார் பேருந்து நிலைய வணிக வளாக கட்டடத்தில் திடீர் தீ விபத்து!
Published : Feb 23, 2024, 9:04 PM IST
மதுரை: மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் கட்டப்பட்டது. பேருந்து நிலையம் ஏற்கனவே செயற்பாட்டில் உள்ள நிலையில், வணிக வளாகம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.119 கோடியில் 474 கடைகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடம் பல்வேறு வசதிகள் உடன் திறப்பு விழா காண உள்ளது.
இந்த நிலையில், இந்த வணிக வளாகத்தினுள் முதலாம் மற்றும் இரண்டாம் தளத்தில் நெகிழி தாள்கள், எலக்ட்ரிக் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்தது. இதில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த திடீர் தீ விபத்து காரணமாக ஏற்பட்ட கரும்புகை கட்டிடத்திற்கு வெளியே பரவியது.
இதனையடுத்து தகவல் அறிந்து வந்த தீயனைப்பு துறையினர், 2 தீயணைப்பு வாகனம் மூலம் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து திடீர் தீ விபத்து குறித்து திடீர் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.