தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

திண்டுக்கல்லில் கோட் பட ரிலீஸ்; நீதிமன்ற உத்தரவை மீறி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்! - GOAT Movie banners Removed - GOAT MOVIE BANNERS REMOVED

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2024, 5:10 PM IST

திண்டுக்கல்: வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய்யின் 68ஆவது படமாக உருவாகியுள்ளது தி கோட். பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மோகன், வைபவ், ஜெயராம், பிரேம்ஜி, மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கிய தி கோட் இன்று  (செப்.5) உலகளவில் 5 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

இதனையடுத்து ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ராஜேந்திரா, உமா மற்றும் ஆர்த்தி கிராண்ட் உள்ளிட்ட திரையரங்குகளில் கோட் திரைப்படம்  ஓடிக்கொண்டு இருக்கிறது. திரைப்படத்தை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் 20க்கும் மேற்பட்ட பேனர்களை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி மாநகராட்சி அனுமதி பெறாமல் திரையரங்குகள் முன்பு சாலை ஓரங்களில் வைத்திருந்தனர்.

இதனால் திரையரங்குகள்THE முன் வைக்கப்பட்டிருந்த அனைத்து பேனர்களையும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். ரசிகர்கள் திரையரங்குகளுக்குள் சென்ற பின்பு இந்த பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

ABOUT THE AUTHOR

...view details