தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

சாக்லேட் வாங்கச் சென்ற சிறுவனை கடித்துக் குதறிய நாய்.. திருப்பத்தூர் நகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை! - Tirupathur Dog Bite video - TIRUPATHUR DOG BITE VIDEO

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2024, 2:12 PM IST

திருப்பத்தூர்:  திருப்பத்தூர் ஹாரிப் நகரைச் சேர்ந்த தாஹித் என்பவரின் மகன் அத்திக் (7). இவர் 12வது வார்டு ராஜன் தெரு பகுதியில் உள்ள உஸ்மானியா பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், இன்று காலை சிறுவன் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுள்ளார்.

பின்னர் இடைவேளை நேரத்தில் பள்ளி அருகாமையில் உள்ள கடைக்குச் சென்று சாக்லேட் வாங்கிக்கொண்டு திரும்புகையில், சாலையில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று சிறுவனை கடித்துக் குதறியது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், நாயை விரட்டியதுடன், படுகாயம் அடைந்த சிறுவனை மீட்டனர்.

தற்போது அந்த சிறுவன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சிறுவனை நாய் கடிப்பது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்கள் குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும், மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, உடனடியாக நடவடிக்கை எடுத்து, தெருநாய்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details