தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

கோவில்பட்டி மிட்டாய் கடைக்குள் திடீரென புகுந்த கார்.. சிசிடிவி காட்சிகள் வைரல்! - car entered in the candy shop - CAR ENTERED IN THE CANDY SHOP

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 27, 2024, 5:33 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜு நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (19). இவர் தனது தாயாருடன் கோவில்பட்டி மாதாங்கோவில் சாலையில் டாடா காரில் சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது, சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது மோதி, அருகே இருந்த சமுத்திர பாண்டி என்பவருக்குச் சொந்தமான மிட்டாய் கடைக்குள் புகுந்தது. 

இதனைப் பார்த்த அவ்வழியாகச் சென்றவர்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேற்கு காவல்நிலைய போலீசார், ரமேஷிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விபத்தில், கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் காரை ஓட்டி வந்த இளைஞர் மற்றும் அவரது தாய் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சுமார் 2 மணி நேரத்திற்குப் பின்னர், அங்கிருந்து காரை அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

ABOUT THE AUTHOR

...view details