கார் மெக்கானிக் ஓட்டிச் சென்ற காரில் திடீர் தீ.. திருவண்ணாமலையில் நடந்தது என்ன? - Car caught fire - CAR CAUGHT FIRE
Published : Jun 18, 2024, 10:35 AM IST
திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகரில் உள்ள புறவழிச்சாலையில் வெற்றிவேல் என்பவர் கார் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் கோலாப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் தனது சொந்தமான டாடா இண்டிகா காரை பழுது நீக்குவதற்காக மெக்கானிக் செட்டில் விட்டுச் சென்றுள்ளார்.
இதனைதொடர்ந்து மெக்கானிக் வெற்றிவேல், ஏழுமலையின் காரை பழுது நீக்கி பெயிண்ட் அடிப்பதற்காக திருவண்ணாமலையை அடுத்த நல்லவன்பாளையம் புறவழிச்சாலையில் ஓட்டிச் சென்ற போது திடீரென்று முன்பக்கத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை கண்ட மெக்கானிக் வெற்றிவேல் உடனடியாக காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி உள்ளார்.
அப்போது தீ கார் முழுவதும் பரவி கார் முற்றிலும் எரிந்து தீக்கிரையானது. இதுகுறித்து தகவல் அறிந்த மேற்கு காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் நல்லவன்பாளையம் புறவழிச்சாலையில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக கார்கள் திடீரென்று திப்பற்றி எரியும் சம்பவம் அதிகரித்து வருகிறது.