கோடை விடுமுறை எதிரொலி: பவானி சாகர் அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்! - கோடை விடுமுறை எதிரொலி - கோடை விடுமுறை எதிரொலி
Published : May 13, 2024, 6:11 PM IST
ஈரோடு: கோடை விடுமுறையைக் கொண்டாட பவானி சாகர் அணை பூங்காவில் குவிந்த பார்வையாளர்கள். பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்றுகள் இயக்கப்படாததால் பார்வையாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் நீர்வளத் துறைக்குச் சொந்தமான அணைப் பூங்கா அமைந்துள்ளது. 15 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பூங்காவில் படகு இல்லம், சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல், சிறுவர் ரயில், கொலம்பஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு அம்சங்களுடன் உள்ளதோடு, பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுப்பதற்காக அழகிய புல் தரைகள் அமைக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை நாட்களில் பவானி சாகர் அணைப் பூங்காவிற்கு அதிக அளவில் பார்வையாளர்கள் வருகை தருவது வழக்கம். பூங்காவில் குடும்பத்துடன் பொழுது போக்கிய பார்வையாளர்கள் ஊஞ்சல், சறுக்கு, சிறுவர் ரயில், கொலம்பஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு சாதனங்களில் விளையாடி மகிழ்ந்தனர். பார்வையாளர்களுக்காகப் பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்றுகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாகச் செயற்கை நீரூற்றுகள் இயக்கப்படவில்லை. இதனால் செயற்கை நீரூற்றை ஆர்வத்துடன் காண வந்த பார்வையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.