Live: "மாடு புடி மாடு" - விறுவிறுப்புடன் துவங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! - JALLIKATTU 2025 LIVE
Published : Jan 14, 2025, 6:53 AM IST
மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் பொங்கல் திருநாளான இன்று (ஜன.14) அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அமர்க்களமாக துவங்கியுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை 6.30 மணி அளவில் துவங்கியது. மேலும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் சிறந்த காளைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பாக டிராக்டர் பரிசும், சிறந்த மாடுபிடி வீரருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பாக வழங்கும் நிசான் காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. காலையிலேயே, மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பில் முதல் சுற்றில் இறங்கக்கூடிய மாடுபிடி வீரர்கள் 75 பேர் பங்கேற்றனர். தற்போது, ஜல்லிக்கட்டி போட்டிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. அதற்கான நேரலையை இங்கே காணலாம்.