மக்கள் விரோதி ஆர்.என்.ரவியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு என சுவரொட்டிகளால் திருவாரூரில் பரபரப்பு..! - ஆர் என் ரவி
Published : Jan 27, 2024, 6:27 PM IST
திருவாரூர்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாகப்பட்டினத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நாளை (ஜன.28) சென்னை இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார். அதன்பின், சாலை மார்க்கமாகத் திருவாரூர் அருகே விளமலில் உள்ள விருந்தினர் மாளிகை சென்றடைந்து. அங்கு மதிய உணவை முடித்து விட்டு நாகப்பட்டினம் செல்ல இருக்கிறார்.
இந்த நிலையில், திருவாரூர் நகரத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேசத் தந்தை மகாத்மா காந்தியை இழிவுபடுத்தி மாநில உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் மக்கள் விரோதி ஆர்.எஸ்.எஸ் ஆர்.என்.ரவியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
அதேபோல், ஜனவரி 28ல் திருவாரூருக்கு வருகை தரும் ஆளுநர் ரவியை விரட்டியடிக்கக் கருப்பு கொடிகளோடு வருக என்று மதச்சார்பற்ற அரசியல் இயக்கங்கள் திருவாரூர் மாவட்டம் என்கிற பெயரில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
இந்த சுவரொட்டிகள், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம் என நகரின் முக்கிய பகுதிகளில் ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.