மெழுகுவர்த்தி ஏந்தி அன்பை வெளிப்படுத்திய தென்காசி தனியார் பெண்கள் கல்லூரி முன்னாள் மாணவிகள்! - alumni meet - ALUMNI MEET
Published : Sep 19, 2024, 1:22 PM IST
தென்காசி: தென்காசி நகர்ப் பகுதியில் அமைந்துள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஏராளமான முன்னாள் மாணவிகள் தங்கள் கணவர் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரிக்கு வந்த மாணவிகளை ஆசிரியர்கள் வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தாளாளர் ராஜ குமார் மாணவிகளை வரவேற்றுப் பேசியதுடன், நினைவுப் பரிசுகளை வழங்கினார். மேலும், மாணவிகள் தங்கள் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தியதுடன், குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து, நிகழ்ச்சியில் தங்களுக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்களைப் போற்றுகின்ற வகையிலும், இறைவனை வழிபடும் வகையிலும் மெழுகுவர்த்தி ஏந்தி தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.
இது குறித்து அக்கல்லூரியில் பயின்ற மாணவிகள் கூறியதாவது, “பல நாட்களுக்குப் பிறகு கல்லூரி பேராசிரியர்களையும், எங்களுடன் படித்த சக நண்பர்களையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. இதேபோல் அடுத்த ஆண்டும் இதை விட சிறப்பாக இந்த விழாவை நடத்த முயற்சி செய்யவுள்ளோம். இந்த விழாவினைச் சிறப்பாக நடத்திய ஆசிரியர்களுக்கு, கல்லூரி நிர்வாகத்திற்கும் எங்களுடையை நன்றிகள்" என தெரிவித்தனர்.