"விஜய் சொன்னாலும் கேட்கமாட்டோம்" மாநாட்டு பந்தலிலேயே மது அருந்தும் ரசிகர்கள்.! - TVK MAANADU
Published : Oct 27, 2024, 4:18 PM IST
விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு இன்று(ஞாயிற்றுக்கிழமை) விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டுப் பந்தலில் முகாமிட்டுள்ளனர்.
அவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் இதர அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு மிக்சர், பிஸ்கெட், தண்ணீர் பாட்டில் கொண்ட நொறுக்கு தீனி பாக்கெட்கள் தொண்டர்களுக்கு வழங்கப்படுகிறது.
முன்னதாக மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதில் மது அருந்திவிட்டு வருபவர்களுக்கு மாநாட்டில் அனுமதி இல்லை. எனவே, மது அருந்திவிட்டு வரக்கூடாது.சட்டவிரோதமான பொருட்கள் கொண்டு வரக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இதை பொருட்படுத்தாமல், மாநாட்டில் பந்தலிலே புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடையச் செய்து இருந்தது. இந்தநிலையில் மாநாட்டு பந்தலிலேயே மது பாட்டில்களை கையில் எடுத்து காண்பிப்பதும், கூட்டமாக உட்கார்ந்து மது அருந்துவது போன்ற காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.