Live: தஞ்சாவூரில் தேமுதிக வேட்பாளர் சிவநேசனை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்..! - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
Published : Apr 6, 2024, 6:26 PM IST
|Updated : Apr 6, 2024, 7:02 PM IST
தஞ்சாவூர்: நாடு முழுவதும் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19ம் தேதி முதல் தொடங்கி 7 கட்டங்களாக ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்.19 தேதி தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அதிமுக பொதுச் செயலாளரும், தமிழகச் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தினமும் இரண்டு பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுப் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், அதிமுக தஞ்சாவூர் மாநகர் மாவட்ட கழகம் சார்பில், தஞ்சாவூர் பகுதியில், தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளர் சிவநேசனை ஆதரித்து இன்று (ஏப்.6) நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று முரசு சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகிறார்.அதனை நேரலையில் காணலாம்...
Last Updated : Apr 6, 2024, 7:02 PM IST