LIVE: சிதம்பரம் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து ஈபிஎஸ் பிரச்சாரம்! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024
Published : Apr 13, 2024, 5:45 PM IST
|Updated : Apr 13, 2024, 6:17 PM IST
அரியலூர்: அரியலூரில் சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதன் நேரலை காட்சிகள்..தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிதம்பரம் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து அரியலூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். சந்திரகாசன் பெரம்பலூர் மாவட்டத்தின் அதிமுகவின் இலக்கிய அணி செயலாளரால பதவி வகித்து வருகிறார். முன்னதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேனியில் டிடிவி தினகரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட போது, ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு ஈபிஎஸ் கையில் அதிமுக இருக்காது என கூறியுள்ளார். அண்ணாமலை பேசியதற்கு இன்று பிரச்சாரத்தில் ஈபிஎஸ் பதிலடி கொடுப்பார் என அதிமுகவினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Last Updated : Apr 13, 2024, 6:17 PM IST