அஜித்குமார் பிறந்த நாள்: தலையில் பிரஷை வைத்து 'அஜித்' படம் வரைந்த ஓவியர்! - ajith birthday - AJITH BIRTHDAY
Published : May 1, 2024, 10:32 AM IST
கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை சேர்ந்த ஓவியர் சு.செல்வம் அவர்கள் நடிகர் அஜித்குமார் பிறந்தநாள் முன்னிட்டு, பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தன் தலையில் பிரஷ் வைத்து, நடிகர் அஜித்குமாரின் உருவப்படத்தை வரைந்து அசத்தியுள்ளார்.
'அஜித்' - இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளக்கும். இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். இன்று தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக உருமாறியிருக்கிறார்.
திரைத்துறையில் எந்தவித பின்புலமின்றி அறிமுகமாகி இன்று தனது 'விடாமுயற்சியால்' தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கி இருக்கிறார். சினிமா ரசிகர்களால் 'தல' என அன்போடு அழைக்கப்படும் நடிகர் அஜித் இன்று தனது 53வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இதனை முன்னிட்டு அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஓவியர் சு.செல்வம் வித்தியாசமான முறையில், தன் தலையில் பிரஷ் வைத்து, அவரது உருவப்படத்தை வரைந்து அசத்தியுள்ளார்.
இதனை வெறும் 5 நிமிடத்தில் செய்து அசத்தியுள்ளார், ஓவியர் சு.செல்வம். இந்த ஓவியத்தைப் பார்த்த அஜித் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்களுக்குப் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த ஓவியம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.