பழனியில் செல்போன் சர்வீஸ் கடையில் வெடித்து சிதறிய செல்போன்.. பதைபதைக்கும் சிசிடிவி! - mobile blast
Published : Feb 5, 2024, 11:28 AM IST
திண்டுக்கல்: பழனி தாராபுரம் சாலையில் சபரிகிரி என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் (பிப்.3) வாடிக்கையாளர் ஒருவர் செல்போன் ஒன்றை சர்வீஸ் செய்வதற்குக் கொண்டு வந்துள்ளார். அப்போது செல்போனை சர்வீஸ் செய்து கொண்டிருந்தபோது, திடீரென செல்போன் வெடித்துச் சிதறியதால் அலறி அடித்துக் கொண்டு சபரிகிரி கடையை விட்டு வெளியேச் சென்று விட்டார்.
மேலும், செல்போனிலிருந்து திடீரென கரும்புகைகள் கடை முழுவதும் கிளம்பியதால், அதிர்ஷ்டவசமாகக் காயமின்றி உயிர் தப்பினார். இந்த காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வரலாகப் பரவி வருகின்றன.
இந்நிலையில் செல்போன் பழுது பார்க்கும் சில வல்லுநர்கள் கூறுகையில், வீங்கிய நிலையில் உள்ள செல்போன்களை அருகில் வைக்கக் கூடாது. ஏனெனில் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலை உருவாகலாம். ஆகையால் பேட்டரியை உடனடியாக மாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். தற்போது செல்போன் வெடிப்புகள் தொடர்வது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும் உருவாக்கி உள்ளது.