டூவீலர், சாலையோரம் சிம் கார்டு விற்பனை செய்தவர்கள் மீது மோதிய கார்! என்ன நடந்தது? - Gudiyatham Accident - GUDIYATHAM ACCIDENT
Published : Aug 18, 2024, 10:59 AM IST
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராம்குமார். இவர் காந்தி ரோடு பகுதியில் கார் ஓட்டிக்கொண்டு வரும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீதும் சாலையோரம் நின்று சிம் கார்டு விற்பனை செய்து கொண்டிருந்தவர்கள் மீதும் மோதி விபத்துக்கு உள்ளானது.
இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பாஸ்கர் என்பவரும், அவரது நண்பரும் காயமடைந்தனர். பாஸ்கர் படுகாயமுற்ற நிலையில், அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வந்த குடியாத்தம் காவல் நிலைய போலீசார், கார் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, கார் ஓட்டி வந்த ராம்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.