தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

LIVE - 78வது சுதந்திர தின விழா: செங்கோட்டையில் பிரதமர் மோடி உரை - independence day PM Modi speech - INDEPENDENCE DAY PM MODI SPEECH

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 15, 2024, 7:26 AM IST

Updated : Aug 15, 2024, 9:40 AM IST

டெல்லி: பாரத நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன் நேரலை காட்சிகள்..நாட்டின் 78வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டை கொத்தளத்தில் 11வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவில் விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழில்துறை வல்லுநர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சுமார் 7,000 பேர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர். இதில், 23 போ் தமிழ்நாட்டை சோ்ந்தவா்கள். சுதந்திர தினவிழாவையொட்டி டெல்லியில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.'2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த பாரதம்' என்ற கருபொருளில் நடப்பாண்டு சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சுதந்திர தின உரையில் மத்திய அரசின் செயல்திட்டம் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து பல்வேறு அறிவிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டு வருகிறார்.
Last Updated : Aug 15, 2024, 9:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details