தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

Live: 76-வது குடியரசு தின விழா.. சென்னையில் வாகன அணிவகுப்பு கோலாகலத் துவக்கம்! - 76TH REPUBLIC DAY

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 26, 2025, 7:41 AM IST

நாடு முழுவதும் 76வது குடியரசுத் தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே 76 ஆவது குடியரசு தின விழாவையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி, அணி வகுப்பு மரியாதை ஏற்றுக் கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். பின்னர், சமூக சமத்துவத்திற்கான மத நல்லிணக்க விருது, காந்தியடிகள் காவலர் பதக்கம், கல்பனா சாவ்லா விருது, நெல் உற்பத்திக்கான விருது உள்ளிட்டவற்றை முதலமைச்சர் வழங்குகிறார். குடியரசு தினத்தையொட்டி தமிழ்நாட்டின் கலச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக அணிவகுப்புகள் நடைபெறும்; முப்படை வீரர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிக்களும் நடைபெற உள்ளது. செய்திதுறை சார்பாக மங்கள இசை, காவல்துறை, பள்ளிகல்வித்துறை, பொதுதேர்தல் துறை, வனத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலங்கார அணிவகுப்பு ஊர்திகளும் பங்கேற்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே குடியரசு தின விழா நடைபெறும். ஆனால் அந்த பகுதிகளில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால், இந்த ஆண்டு மாற்று இடமாக உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நடைபெறவது குறிப்பிடத்தக்கது. 

ABOUT THE AUTHOR

...view details