சான் பிரான்சிஸ்கோ :கூகுள் தனது செயற்கை நுண்ணறிவு பார்ட் (Bard) சாட் பாட்டை ஜெமினி (Gemini) என்று பெயர் மாற்றம் செய்வதாக அறிவித்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகுள் அசிஸ்டண்ட்டை பயன்படுத்துவதை போலவே ஜெமினியை இயல்புநிலை அசிஸ்டென்ட் ஆக தேர்வு செய்து பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஓபன் ஏஐயுடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறவனம சாட் ஜிபிடியை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து கூகுள் நிறுவனம் தனது பார்ட் சாட் பாட்டை அறிமுகம் செய்தது. இருப்பினும், ஒரு சில தொழில்நுட்ப பிரச்சினை காரணங்களால் கூகுள் எதிர்பார்த்த அளவுக்கு பார்ட் மக்களிடையே சென்றடையவில்லை.
இதையடுத்து பார்ட் ஏஐ-யை மேம்படுத்தும் பணியில் கூகுள் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டது. இந்நிலையில், பார்ட் சாட் பாட்டை, ஜெமினி என பெயர் மாற்றம் செய்து உள்ளதாக கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்து உள்ளார். ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் செல்போன்களில் உள்ள வழக்கமான அசிஸ்டன்ட்டை பயன்படுத்துவது போல், ஜெமினியை ஏஐ-யை பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டு00 உள்ளது.
மேலும், ஐபோன்களிலும் ஜெமினி சாட் பாட்டை உதவி அசிஸ்டன்டாக கொண்டு வர ஆப்பிள் நிறுவனத்துடன் கூகுள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், ஆப்பிள் ஐபோன்களில் ஏற்கனவே உள்ள சிரி தொழில்நுட்பம் ஜெமினி சாட் பாட்டால் சரிவை சந்திக்கக் கூடும் என்பதால், சிரி தொழில்நுட்பத்திலேயே தொடர்ந்து நீடிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜெமினி சாட் பாட் மூலம் திட்டமிடல், புது கருத்து உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திறன்களை மேம்படுத்திக் கொள்ள முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்து உள்ளது. முதல் கட்டமாக ஜெமினி செய்ற்கை நுண்ணறிவு சாட் பாட்டை ஆங்கில வழியில் அமெரிக்காவில் வெளியிட கூகுள் நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் தொழில்நுட்பத்தை படிப்படியாக அறிமுகப்படுத்தவும், ஜப்பான் மற்றும் கொரிய மொழிகளில் அதன் பதிப்புகளை வெளியிடவும் கூகுள் நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஜெமினியின் அடிப்படை பதிப்புகளை பயனர்களுக்கு இலவசமாகவும், மேம்படுத்தப்பட்ட பதிப்புகளை மாதம் 20 டாலர் என்ற விலையிலும் வழங்க கூகுள் திட்டமிட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :கூகுள் பிளே ஸ்டோரில் 2,200 போலி கடன் செயலிகள் நீக்கம் - மத்திய அரசு நடவடிக்கை!