தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / technology

யூடியூப்பை குறிவைக்கும் எலான் மஸ்க்! எக்ஸ் தளத்தில் புது வசதிகள் அறிமுகம் செய்ய திட்டம்!

யூடியூப் போன்று இனி பயனர்கள் தங்களது எக்ஸ் பக்கத்திலும் நீண்ட வடிவிலான வீடியோக்களை பார்கக மற்றும் பதிவிடலாம் என எலான் மஸ்க் அறிவித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 9, 2024, 12:28 PM IST

Updated : Apr 11, 2024, 4:03 PM IST

ஐதராபாத் : ட்விட்டரை 44 பில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கியது முதல் அதில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார் உலக பணக்காரர் எலான் மஸ்க். தற்போது கூகுள் நிறுவனத்தின் யூடியூப்பிற்கு போட்டியாக நீண்ட வடிவிலான வீடியோக்களை பயனர்கள் தங்களது ஸ்மார்ட் டிவிகளை பார்க்கக் கூடிய வசதிகளை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார்.

இதற்காக அமேசான் மற்றும் சாம்சங் டிவிகளுக்கான தனி செயலியை தயாரித்து வருவதாக கூறப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பயனர் ஒருவர் எக்ஸ் பக்கத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க், நீண்ட வடிவிலான வீடியோக்களை டிவி திரையில் காணும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக பதிவிட்டு உள்ளார்.

யூடியூப்பை போன்று இனி எக்ஸ் பக்கத்திலும் நீண்ட வடிவிலான வீடியோக்களை பயனர்கள் பதிவிடம், பார்க்கவும் முடியும் எனக் கூறப்படுகிறது. இதற்கான வசதியை எலான் மஸ்க் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் நீண்ட வடிவிலான கதை, உள்ளடக்கங்களை பயனர்கள் தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிடும் வசதியை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தி இருந்தார்.

அதன் மூலம் பயனர்கள் தங்களது பிரத்யேக உள்ளடக்கங்களை ஏறத்தாழ 2 ஆயிரத்து 500 வார்த்தைகள் வரை பதிவிட முடியும். அதேநேரம் இந்த வசதியை பெற பயனர் எக்ஸ் பக்கத்தின் சந்தாதாரராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. பிரீமியம் செலுத்தும் பயனர்கள் கட்டுரைகள், வித விதமான ஸ்டைல்களில், புகைப்படம் மற்றும் வீடியோவுடன் பதிவிடலாம் என எலான் மஸ்க் தெரிவித்து இருந்தார்.

தற்போது ஸ்மார்ட் டிவி மற்றும் நீண்ட வடிவிலான உள்ளடக்கங்களை பதிவிடும் வசதிகளை தவிர்த்து வீடியோ கேம்ஸ் எக்ஸ்பிளோரிங் மற்றும் போட்கேஸ்ட்களையும் விரைவில் அறிமுகப்படுத்த எலான் மஸ்க் திட்டமிட்டு உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

இதையும் படிங்க :மத்திய பிரதேச தலைமை செயலகத்தில் பயங்கர தீ விபத்து! எப்படி நடந்தது?

Last Updated : Apr 11, 2024, 4:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details