வெகு சில நாள்களாக டேப்லெட்டுகளின் வரவு பெரிதாக இல்லை என்றாலும், ரியல்மி, சியோமி, லெனோவோ, சாம்சங் போன்ற நிறுவனங்களிடம் இருந்து அவ்வபோது ஆண்ட்ராய்டு டேப்லெட்டுகள் வெளியாகின்றன. அந்தவகையில், இன்று ரியல்மி பேட் 2 லைட் 4ஜி டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டது.
பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த டேப்லெட்டில் பயனர்களுக்குத் தேவையான பல சிறப்புமிக்க அம்சங்கள் அடங்கியுள்ளன. முக்கியமாக 4ஜி காலிங் ஆதரவு, 2K டிஸ்ப்ளே, பெரிய 8,000mAh பேட்டரி ஆகிய அம்சங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
ரியல்மி பேட் 2 லைட் வெளியீடு (Realme Pad 2 Lite Launch):
ஆன்லைன் வர்த்தகத் தளமான பிளிப்கார்ட்டில் ரியல்மி வெளியீடு தொடர்பான மைக்ரோ தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் பகல் 12 மணிக்கு ரியல்மி பேட் 2 லைட் வெளியானது. நிறுவனம் ஆன்லைன் நேரலை வாயிலாக இந்த வெளியீட்டு நிகழ்வை நடத்தியது. புதிதாக வெளியான ரியல்மி பேட் 2 லைட் டேப்லெட்டை பயனர்கள் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா இணையதளம் ஆகிவற்றில் இருந்து ஆர்டர் செய்து பெற்றுகொள்ளலாம்.
ரியல்மி பேட் 2 லைட் விலை (Realme Pad 2 Lite price in India):
இந்தியாவில் எந்தவொரு மொபைல் நிறுவனமும் கொண்டு வராத விலையை ரியல்மி நிர்ணயம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, 4ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் புதிய டேப்லெட்டின் விலை ரூ.14,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் வகை ரூ.16,999 என்ற விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
ரியல்மி பேட் 2 லைட் சிறப்பம்சங்கள் (Credits: Flipkart) ரியல்மி பேட் 2 லைட் அம்சங்கள் (Realme Pad 2 Lite Specifications):
ரியல்மி பேட் 2 லைட் டேப்லெட்டில் 10.95-இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 1920 x 1200 ரெசல்யூஷனில், டிசி டிம்மிங் அடாப்டிவ் பிரைட்னஸ் உடன், 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸைக் கொண்டிருக்கும். இது ஒரு கண்ணுக்கு இதமான 90Hz 2K டிஸ்ப்ளே என நிறுவனம் தெரிவித்துள்ளது. டேப்லெட்டின் உடல் கட்டமைப்புடன் இந்த டிஸ்ப்ளேயின் ஒப்பீட்டு அளவு (Screen-to-Body Ratio) 83.6% ஆக இருக்கிறது.
டேப்லெட்டை திறன்பட இயக்க மீடியாடெக்கின் பட்ஜெட் ஹீலியோ ஜி99 சிப்செட் (Helio G99 Chipset) பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் நிறுவப்பட்டிருக்கும் 8ஜிபி ரேமை நம்மால் நீட்டித்துகொள்ள முடியும். அதாவது 8ஜிபி ரேமை நீட்டித்து 16ஜிபி ஆக பயன்படுத்திக் கொள்ளலாம். இது ஒரு LPDDR4x வகை ரேம் ஆகும். மேலும், 128ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. ரியல்மி பேட் 2 லைட் டேப்லெட்டின் பின்பக்கம் 8 மெகாபிக்சல் கேமராவும், முன்பக்கம் 5 மெகாபிக்சல் கேமராவும் இணைக்கப்பட்டுள்ளன.
பொழுதுபோக்கு அம்சத்தை மேம்படுத்த 4 ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் நிறுவப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ரியல்மி UI 5.0 இயங்குதளம் டேப்லெட்டை நிர்வகிக்கிறது. மொத்தமாக அனைத்து செயல்பாடுகளையும் சீராக்க பெரிய 8,300mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்க 15W சூப்பர்வூக் சார்ஜர் கொடுக்கப்படுகிறது. பள்ளிக் கல்லூரி மாணவர்களை கவனத்தில் கொண்டு இந்த புதிய ரியல்மி பேட் 2 லைட் டேப்லெட்டை நிறுவனம் கொண்டுவருகிறது.