தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / technology

சயின்ஸ் சிட்டி ஆஃப் பெங்களூர்; பெங்களூருவில் தொடங்கப்பட்ட அறிவியல் வரலாற்றை எடுத்துரைக்கும் கண்காட்சி.. - Science City of Bangalore - SCIENCE CITY OF BANGALORE

Bangalore Science Exhibition: பெங்களூருவின் அறிவியல் வரலாற்றை எடுத்துரைக்கும் விதமாக 'சயின்ஸ் சிட்டி ஆஃப் பெங்களூரு' என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

அறிவியல் கண்காட்சி, பெங்களூரு
அறிவியல் கண்காட்சி, பெங்களூரு (Credits - ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2024, 7:32 PM IST

பெங்களூரு: பெங்களூருவில் இருந்த விஞ்ஞானிகள் பலரும் தங்கலது ஆராய்ச்சிக்கு பயன்படுத்திய அரியவகை பொருள்கள் மற்றும் அவர்களது வாழ்க்கை பாதையை விவரிக்கும் வகையில், பெங்களூருவின் 'சயின்ஸ் சிட்டி ஆஃப் பெங்களூரு' (Science City of Bangalore) என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் இளைஞர் சமுதாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில், கர்நாடகா மாநில அரசும், சர்வதேச அறிவியல் தொகுப்பு வலையமைப்பும் இணைந்து இந்த அறிவியல் கண்காட்சியை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கண்காட்சியானது, 19ஆம் நூற்றாண்டில் இருந்து இன்றுவரை தொழில்துறை, ராணுவம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையங்களுக்கு பெங்களூருவின் அறிவியல் பங்களிப்புகள் பற்றிய விரிவான கண்ணோட்டத்தை எடுத்துரைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அறிவியல் கண்காட்சி, பெங்களூரு (Credits - ETV Bharat)

இதுமட்டும் அல்லாது, இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள முதல் உலகப் போரில் இந்தியர்கள் பயன்படுத்திய டார்பிடோ எனப்படும் இரும்பு ஈட்டி அனைவரது கவனத்தை ஈர்க்கிறது. இது பெங்களூரில் வடிவமைக்கப்பட்டு, அப்போதைய மெட்ராஸ் இன்ஜினியர் குரூப்பால் டார்பிடோ தயாரித்தது என்றும், முதலாம் உலகப் போரின் போது எதிரிகளுக்கு எதிராகப் போரிட வீரர்கள் இதனை பயன்படுத்தியதாகவும் கண்காட்சியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

சி.வி.ராமன் தபேலா: இயற்பியல் ஆய்வாளர் டாக்டர் சி.வி. ராமன் இசைக்கருவிகளின் அதிர்வுகளை ஆய்வு செய்தபோது, அவரது ஆராய்ச்சிக்கு பயன்படுத்திய தபேலாவை இங்கு காட்சிக்கு வைத்துள்ளனர். மேலும், இசைக் கருவிகளின் அதிர்வுகள் மற்றும் ஒலியை பற்றிய ஆய்வுகுறித்து பார்வையாளர்கள் அறிந்துகொள்ளும் விதமாக செய்முறை விலக்கங்களும் வழங்கப்படுகிறது.

பெங்களூரு கம்ப்யூட்டர்: 2001-2003 காலகட்டத்தில் பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட கணினியை கட்சிபடுத்தியுஇருந்தனர். இதுமட்டும் அல்லாது, இந்த கணினியை தொட்டு பார்க்கவும் மற்றும் பயன்படுத்தவும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அறிவியல் கண்காட்சி, பெங்களூரு (Credits - ETV Bharat)

பல்வேறு ஆய்வகங்கள்: பெங்களூருவில் உள்ள பறவை ஒலி சேகரிப்பு ஆய்வகங்களின் காட்சி, தேசிய அறிவியல் கிருமி மாதிரி சேகரிப்பு ஆய்வகங்களின் காட்சி, தொலைப்பேசியின் கண்டுபிடிப்பு, பெங்களூரு மேப்பிங், காஸ்மிக் கதிர்கள், நகரத்தில் தபால் தலைகள், மின்னணு ஆராய்ச்சிகள் போன்றவற்றின் முழுமையான தகவல்களை, அவற்றின் மாதிரிகள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இலவச நுழைவு: பொது மக்களுக்கு இலவச நுழைவு உள்ளது. திங்கள் மற்றும் செவ்வாய் தவிர புதன் முதல் ஞாயிறு வரை திறந்திருக்கும். காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும். 12 பேர் கொண்ட சிறப்புக் குழு கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் அறிவியல் மாதிரிகளை விளக்குகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:செப்டம்பர் 14-க்குள்ள இத செஞ்சிருங்க.. இல்லேன்னா சிரமம் தான்.. ஆதார் அட்டையை புதுப்பிப்பது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details