தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மன்னிப்பு கோரினார் யூடியூபர் இர்பான்.. சுகாதாரத் துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - Irfan gender reveal issue - IRFAN GENDER REVEAL ISSUE

YouTuber Irfan: ஜெண்டர் ரிவீல் விவகாரத்தில் மருத்துவத்துறையின் சார்பாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்து யூடியூபர் இர்பான் மன்னிப்பு கடிதம் கொடுத்துள்ளார்.

யூடியூபர் இர்பான் புகைப்படம்
யூடியூபர் இர்பான் புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 22, 2024, 7:49 PM IST

சென்னை: பிரபல யூடியூபர் இர்பான், அவரது மனைவியுடன் இணைந்து சில நாட்களுக்கு முன் துபாய் சென்றார். அங்குள்ள மருத்துவமனையில் தனக்கு பிறக்கவிருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து பரிசோதனை செய்து, அதனை தன் யூடியூப் சேனல் உள்பட சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டார்.

இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து இர்பானிடம் விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியது. மேலும், காவல்துறையிலும் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (மே 22) யூடியூபர் இர்பான் சென்னை, டிஎம்எஸ் வளாகத்திற்கு நேரில் வந்து தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்து, சுகாதாரத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து மன்னிப்பு கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார்.

மேலும், தனது யூடியூப் பக்கத்தில் வருத்தம் தெரிவித்து, விளக்கி மன்னிப்பு வீடியோ ஒன்றை வெளியிட உள்ளதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இர்பான் வழங்கிய கடிதத்தில், "இதுபோன்ற விதிமுறை உள்ளது என எனக்கு தெரியாது. இந்தியாவில் பாலினம் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மட்டுமே தான் எண்ணினேன். இப்படி ஒரு விதிமுறை இருப்பது என்பது தெரியாமல் தான் வீடியோ வெளியிட்டேன்" என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அய்யாக்கண்ணு கைது.. திருச்சியில் செல்போன் டவர் மீது ஏறி விவசாயிகள் போராட்டம்! - Farmers Climbed Cell Phone Tower

ABOUT THE AUTHOR

...view details