ஈரோடு: கர்நாடக மாநிலத்தில் இருந்து தக்காளி பாரம் ஏற்றிய பிக்கப் வேன் சத்தியமங்கலம் - மைசூர் சாலையில் புதுவடவள்ளி முருகன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி நோக்கி வேகமாக சென்ற ஒரு கார் முருகன் கோயில் வளைவில் திரும்பிய போது, கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த தக்காளி பாரம் ஏற்றிய பிக்கப் சரக்கு வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு காரும் மோதியது.
இந்த விபத்தில் காரின் ஒரு பகுதி உருக்குலைந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த சத்தியமங்கலம் போலீசார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது காரில் பயணித்த 5 பேரில் ஈரோட்டைச் சேர்ந்த முகில் நிவாஷ் (வயது 21), கால்பந்து வீரர் தர்மேஷ் (18), கல்லூரி மாணவர் ரோகித் (18) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. அங்கிருந்த கிராமமக்கள் உதவியுடன் போலீசார் காரில் சிக்கிய முகில் நிவாஷ் சகோதரர் ஆதி ஸ்ரீவாசன் (18), ஸ்ரீனிவாஷ் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதலுதவிக்கு பின், மேல்சிகிச்சைக்காக ஈரோடு, கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் கூறுகையில், “சத்தியமங்கலத்தில் இருந்து ஆசனூர் தங்கும் விடுதிக்கு செல்வதற்காக நேற்றிரவு 3 காரில் புறப்பட்ட 12 இளைஞர்கள் ஆசனூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.