தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2024, 9:44 PM IST

ETV Bharat / state

காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை... ஈரோட்டில் சம்பவம் - YOUTH MURDER ERODE

Youth Killed: காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்பகையால் இளைஞர் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் ஈரோடு அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொலைசெய்யப்பட்ட இளைஞர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்
கொலைசெய்யப்பட்ட இளைஞர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் (Credits: ETV Bharat Tamilnadu)

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சோளங்காபாளையம் அருகே உள்ள கிளாம்பாடி, முனியப்பன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஷ்(21). இவர் கட்டிட சூப்பர்வைசராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு மது அருந்த திட்டமிட்ட ஹரிஷ், நண்பர் கௌதமுடன் இருசக்கர வாகனத்தில் சென்று மதுபானங்களை வாங்கிக்கொண்டு சாணார்மேடு சாலையில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது சாலையோரமாக நின்று கொண்டிருந்த வெள்ளியங்கிரி என்பவர், ஹரிஷின் வாகனத்தை நிறுத்தி தகராறில் ஈடுபட்டதாகவும், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஹரிஷின் கழுத்தில் குத்திவிட்டு தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஹரிஷை மீட்டு, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மலையம்பாளையம் காவல் நிலைய போலீசார், விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அரசு மருத்துவமனை வளாகத்தில் ஹரிஷின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் ஒன்று திரண்டனர். அப்போது, உடற்கூறு ஆய்வகத்திற்கு முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுவதற்காக அணிவகுத்து வந்தபோது, மருத்துவமனை நுழையிலில் உள்ள கேட் பூட்டப்பட்டதை கண்டு ஆத்திரமடைந்த அவர்கள், போலீசாரின் எதிர்ப்பையும் மீறி கேட்டை வலுக்கட்டாயமாக திறந்து மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, காதல் விவகாரத்தில் ஹரிஷிக்கும் - வெள்ளியங்கிரிக்கும் இடையே முன்பகை இருந்து வந்ததாகவும், இதுதொடர்பாக ஏற்கெனவே மாரியம்மன் கோவில் திருவிழாவில் தகராறு நடைபெற்ற நிலையில், தற்போது கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த சம்பவத்தில் தப்பியோடிய வெள்ளியங்கிரி மட்டுமில்லாமல் அவரது கூட்டாளிகளையும் கைது செய்ய வேண்டும் எனவும், முன்பகை குறித்து காவல் நிலையத்தில் முறையிட்டபோது, உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்ட மலையம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் திருஞானசம்பந்த்தை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் ஹரிஷின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ், ஏடிஎஸ்பி ராஜா ரனவீர் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க:மீண்டும் வெளியே வந்த படையப்பா யானை... அலறியடித்து ஓடிய மக்கள்... வைரலாகும் வீடியோ! - Padayappa Elephant

ABOUT THE AUTHOR

...view details