சென்னை:சென்னை அம்பத்தூர் எம்கேபி நகரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் நேற்று இரவு கொலை செய்யப்பட்டதாக அம்பத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் மகேந்திரனின் மகன் அருண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் அவரது மகனே அவரை கொலை செய்து இருக்கலாம் எனவும் கூறப்பட்டது. இதனையடுத்து சந்தேகமடைந்த போலீசார் மகேந்திரனின் மகன் அருணிடம் தீவிர விசாரணை நடத்தினர்.