தேனி:தேனி மாவட்டம் தேவாரத்தில் திமுக பேரூராட்சி மன்ற தலைவராக இருப்பவர் லட்சுமி. இவரது கணவர் பால்பாண்டி அதே பகுதியில் டாஸ்மாக் மதுபான பார் - ஒன்றை நடத்தி வருகிறார். இதே போல் ஏழாவது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் கவிதா. இவரது கணவர் ரமேஷ் (40), திமுக பேரூர் இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று இரவு பால்பாண்டி நடத்தி வரும் டாஸ்மாக்கிற்கு, ரமேஷ் மது அருந்துவதற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அனைவரிடமும் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கொடுக்க மறுத்த ரமேஷ்,
"தான் திமுக கவுன்சிலரின் கணவராகவும், பேரூர் இளைஞரணி செயலாளராகவும் இருக்கும் நிலையில் தன்னிடமே பத்து ரூபாய் கூடுதலாக கேட்கிறீர்களே" என கூறி பால்பாண்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது சம்பவ இடத்திற்கு சென்ற பால்பாண்டியின் மகன் பாண்டிசெல்வம் (20), மது மற்றும் கஞ்சா போதையில் கத்தியால் ரமேஷை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் ரமேஷ் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.