சென்னை:குடிபோதையில் சாலையோரம் படுத்திருந்த நபரை கட்டையால் தாக்கி கொலை செய்த நண்பர்கள் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குன்றத்தூர் அடுத்த சின்னபனிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (35). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று (மே 10) இரவு இவர் சாலையோரம் படுத்திருந்துள்ளார். அப்போது குடிபோதையில் வந்த கோவூரைச் சேர்ந்த கணேஷ் (35) என்பவர், யுவராஜ் படுத்திருப்பதை பார்த்து, அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த தகராறில் இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, குடி போதையில் அப்பகுதிக்கு வந்த கணேஷின் நண்பர்கள் சிலர் யுவராஜை சரமாரியாக கல்லாலும், கட்டையாலும் தாக்கியுள்ளனர். இதனைக் கண்ட சிலர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் ரோந்துப் பணியில் இருந்த மாங்காடு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு யுவராஜ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.