தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓய்வு பெற்ற காவலர் எனக் கூறி நடுரோட்டில் இளைஞர் ஓட ஓட விரட்டி அடிப்பு.. வைரலாகும் வீடியோ! - Fight in Chennai road - FIGHT IN CHENNAI ROAD

Fight in Road: சாலையில் கார்களுக்குள் வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில் மது போதையில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் எனக் கூறி, இளைஞரை நடு ரோட்டில் ஓட ஓட விரட்டி அடித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாலையில் சண்டை போட்ட புகைப்படம்
சாலையில் சண்டை போட்ட புகைப்படம் (Credit - ETV Bharat TamilNadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 3, 2024, 5:39 PM IST

சாலையில் சண்டையிடும் காட்சி (Credit - ETV Bharat TamilNadu)

சென்னை:சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த மணிமாறன் என்பவர், நேற்று மாலை பட்டினப்பாக்கம் சந்திப்பு வழியாக தனது மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, பட்டினப்பாக்கம் சந்திப்பில் முன்னால் சென்ற காருடன் வழி விடுவதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, முன்னால் சென்ற ஷிப்ட் காரில் இருந்த நான்கு நபர்கள் சாலையில் இறங்கி, மணிமாறனை அவரது மனைவி முன்பாக தாக்கி உள்ளனர். இதனைப் பார்த்த அங்கிருந்த போக்குவரத்துக் காவலர், உடனடியாக சென்று சண்டையை தடுத்துள்ளார். இருப்பினும், காவல்துறையினர் இருப்பதை பொருட்படுத்தாமல், அந்த கும்பல் தொடர்ந்து அந்த இளைஞரைத் தாக்கியுள்ளனர்.

பின்னர், அந்த கும்பலில் ஒருவர் காவல்துறையில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் என தெரிவித்துவிட்டு, அங்கிருந்து சென்றுள்ளனர். மணிமாறனின் சட்டையைக் கிழித்து சாலையில் துரத்தி துரத்தி அந்த நபர்கள் தாக்கும் வீடியோவானது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், “TN03 AE 9972 என்ற வாகன எண் கொண்ட வாகனத்தில் இருந்து ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் எனக் கூறி தன்னை தாக்கிய நபர் மற்றும் அவருடன் வந்த நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மணிமாறன் அளித்த புகாரின் பேரில், பட்டினப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மணிமாறனை தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதையும் படிங்க: போலீசுக்கு பயந்து போர்டு வைத்த மாடு திருடன்.. சாத்தான்குளத்தில் நடந்தது என்ன? - Sathankulam Cow Theft Issue

ABOUT THE AUTHOR

...view details