தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாம்பை வீட்டுக்குள் கவ்வி வந்த பூனை.. வளர்த்த பூனையே எஜமானியின் உயிருக்கு வினையான சோகம்! - pollachi snake bite - POLLACHI SNAKE BITE

பொள்ளாச்சியில் வளர்த்த பூனையே அதன் எஜமானியின் உயிருக்கு வினையாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த பெண் சாந்தி, பாம்பு
உயிரிழந்த பெண் சாந்தி, கடித்த பாம்பு (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2024, 6:08 PM IST

Updated : Sep 20, 2024, 7:07 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி கோட்டூர் ரோடு நேரு நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி சாந்தி (வயது 58). இவர்களது மகன் சந்தோஷ். இவர்கள் ஒரு பூனையை ஆசையாக வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று அந்த பூனை வீட்டு வளாகத்தில் சுற்றித்திரிந்த கட்டுவிரியன் பாம்பை துரத்தி துரத்தி கடித்துள்ளது. பின்னர் அந்த பாம்பை, வாயில் கவ்விக்கொண்டு வீட்டில் உள்ள ஒரு அறையில் போட்டுவிட்டு சென்றுள்ளது.

இந்நிலையில், அந்த அறையில் சாந்தி அயர்ந்து உறங்கிக்கொண்டுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த பாம்பு உறக்கத்தில் இருந்த சாந்தியை கடித்துள்ளது. இதனால் திடுக்கிட்டு எழுந்த சாந்தி, பாம்பு தன்னை கடித்ததை அறிந்து அலறியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அவரது மகன் சந்தோஷ், உடனடியாக அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மருத்துமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி சாந்தி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வளர்த்த பூனையே பெண்ணின் உயிருக்கு வினையான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:மர்ம சூட்கேஸில் சிக்கிய 14 கிலோ கஞ்சா.. பரபரப்பான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்!

Last Updated : Sep 20, 2024, 7:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details