சென்னை:சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை தட்டான்குளம் தெருவில் செல்வராஜ் என்ற நபருக்குச் சொந்தமான வீட்டை லீசுக்கு விட்டு வருகிறார். இந்நிலையில், அந்த வீட்டை ஷாலினி என்ற பெண் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து லீசுக்கு எடுத்து வீட்டில் குடியேறி உள்ளார். இதனிடையே, ஷாலினி வீட்டை காலி செய்யப் போவதாக கூறி வீட்டு உரிமையாளர் செல்வராஜிடம் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார்.
அதற்கு வீட்டின் உரிமையாளரான செல்வராஜ், பெண்ணிடம் எந்த பதிலும் சொல்லாமல், அடிக்கடி அந்தப் பெண்ணிடம் தகராறு செய்துள்ளார். இது தொடர்பாக கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் ஷாலினி புகார் அளித்துள்ளதாகவும், ஆனால் இதுவரை காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறுகிறார்.