வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடு அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்த நிலையில், இளம்பெண் கடந்த சில காலமாக கருத்துவேறுபாடு காரணமாக கதிர்வேலிடம் இருந்து விலகியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கதிர்வேல் இளம்பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவேன் எனக் கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) கதிர்வேலை கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.